தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.
முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.