Once Upon a Time in Madras படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் பரத் நடிக்கும் அடுத்த படமான `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ ஃபர்ஸ் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத்துடன் அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.