காசாவில் 48 மணிநேரத்தில் 120 பேர் பலி

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த 48 மணிநேரங்களில் மாத்திரம் 120 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை ஊழியர்கள் காயமடைந்துள்ளதோடு வைத்தியசாலை உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதல்களின் போது காசா நகரின் புறநகர் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய அனைவரும் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து காசா மீதான தாக்குதல்கள் அல்லது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.