கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
ரொரன்ரோவில் ஆயுத முனையில் சொகுசு கார் ஒன்றை கடத்திச் சென்ற போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பிரம்டன் பகுதியில் வைத்து அரச பேருந்து மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இது தொடர்பில் தமிழ் தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சந்தேக நபர்கள் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனங்களை கொள்ளையிடுவது மற்றும் வீடுகளுக்கு புகுந்து திருட்டில் ஈடுபடுவது இவர்களின் பிரதான செயற்பாடாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டில் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி, 33 வயதான அபிரா பொன்னய்யா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.