2வது T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் ஹர்டில் 28 ரன்களும், மேத்ய ஷார்ட் 32 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஷ் ராஃப் 4 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இர்பான் கான் 28 பந்தில் 37 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ந்தேதி நடக்கிறது.