கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
“வெறும் இரண்டே மாதங்களுக்குள் லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட போதிலும், ஒரு குழப்பமான நடைமுறை வெளிப்பட்டுள்ளது. இந்த வன்முறையை தடுக்க முடிந்தவர்களால் அவர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளன” என்று ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் நிறுவனமான யூனிசெஃப் (UNICEF) செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “லெபனானில் கடந்த இரண்டு மாதங்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்,” என்று கூறினார்.
இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.