நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவானது. ‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிப்பு ஏற்கன வெளியான நிலையில் வெளியிட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்’ படம் அடுத்த மாதம் 13-ந்தேதி வெளியாகிறது.