மாவீரர்களை மதிக்காத தமிழக கட்சிகள், சீமான் ஆதங்கம்

தமிழகத்தின் எந்தவொரு கட்சியும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக சென்னையில் (Chennai) நேற்று (27) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழர்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு வசதி வாய்ப்போடு உள்ள கட்சிகளில் இருந்து ஒருவர் கூட மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தவில்லை. காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸை மறந்து போன்று எமது மாவீரர்களையும் மறந்து விட்டனர்.

எனில், இந்த திராவிட கட்சிகள் யாருக்காக செயற்படுகின்றன? இவ்வாறான நிலையில், எம் மீதான விமர்சனங்களை நாம் உரமாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.