அரசு நிகழ்ச்சிகளில் எங்கள் பெயர்கள் இல்லை, விசிக வேதனை

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர், பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் இடம் பெறவில்லை. எங்கோ ஒரு மூலையில் ஒரு அதிகாரிகள் செய்யக்கூடிய சிறு தவறு எங்கே போய் முடிகிறது என்று பார்க்க வேண்டும். அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் எப்படி சித்தரிக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும். இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்று கேள்விகள் வருகிறது. பேனர் வைப்பதால் எங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைத்து விடப்போவதில்லை. அப்படி ஒரு புகழ் வெளிச்சத்திற்கான தேவையும் எங்களுக்கு தேவை இல்லை.இனிமேல் இதுபோல் தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.